2015 இனிதே பிறந்துவிட்டது. நண்பர்களும் உறவினர்களும் பரஸ்பர வாழ்த்துப் பரிமாற்றங்களில் லயித்திருக்கிறார்கள், லயித்திருக்கிறோம்.
அனைவருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்த்துப்பா பாடிய நண்பர்கள், நண்பிகள்,
பரிச்சயம் மட்டும் ஏற்பட்டவர்கள் ஆனால் நேரில் காணும் வாய்ப்பு இன்னமும்
வாய்க்காதவர்கள் அனைவருக்கும் பரஸ்பர க்ஷேமத்திற்கும் உயபகுசலோபரியுடன்
கூடிய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
சிலருக்கு புதுவருடப் பிறப்பில் மேற்கொள்ளும் புதிய ஆசைகள், சபதங்கள் இருக்கும். சிலர் அந்த சபதங்களை ரெண்டு நாட்களிலேயே மறந்துவிடுவார்கள். சிலர் மிகச் சீரியஸாக சபதங்களைப் பின்பற்றுவார்கள்.
எனக்கு
வாழ்க்கையில் என்றுமே வருட ஆரம்பத்தில் யாருமே சர்வ சாதாரணமாகச் சொல்லும்
புதுவருட சபதங்கள், டயரி எழுதும் பழக்கம் கிடையாது. பொதுவாகவே குறிக்கோள்
என்று தனியாக எதுவும் இருந்தது கிடையாது.
பெருக்கெடுத்து ஓடும் காவிரி போன்ற நதியின் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நீரின் ஓட்டம் சில சமயம் அதே நதி சிற்சில சுழல்களில் புதைமணல் உள்ள இடங்களில் ஏற்படுத்தும் சலனம் கூடிய ஆர்ப்பரிப்பும், அது மாதிரி சுழல் தன் போக்கில் போய்க்கொண்டிருந்தாலும் ஆற்று நீரின் ஓட்டத்தில் வாழைமட்டையோ கொய்யாப்பழமோ ஆங்காங்கே கரையோரம் இருக்கும் மரங்களிலிருந்து ஆற்றில் விழும் காய் கனிகள் விழுந்து செல்லும்.
அப்படி நதியின் ஓட்டத்தில் அதே போக்கில் போய்க்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு நீர்ப்பெருக்கு எடுக்கும். மணலும் மணல் சார்ந்த அழுக்குகள், முன் சொன்ன இலை தழைகள், கனிகள், குப்பைகள், சிற்சில சமயம் நதியின் சுழலில் சிக்கிய மனிதர்களின் உடல்கள் (பிணங்கள்) என்று எல்லா நேரமும் ஒரு நதியின் ஓட்டம் ஒரே மாதிரியாய் இருக்காது.
சில நேரம் ஒரு சுந்தரமான அமைதி, சில நேரம் ஆர்ப்பரிக்கும் சுழல், சில நேரம் வேகம் மட்டுப்பட்டு எனக்கும் இந்த உலகுக்கும் சம்பந்தமே இல்லை, ஏதோ நான் பாட்டுக்கு சித்தன் போக்கில் சிவனே என்று போகும் போக்கு, என்று நதியின் போக்கு இருக்கும்.
அந்த மாதிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய வாழையோ கொய்யாவோ மனிதப் பிணமோ வேறு ஏதோ ஒரு மிருகத்தின் உடலோ ஏதோ ஒன்று அது மாதிரி சுழலில் சிக்கித் தவிப்பது போல் மனித வாழ்க்கையில் ஓவ்வொரு நொடியும் ஒவ்வொரு கணமும் அவரவர் பார்வையில் ஏதோவொரு முறையில் சில நேரம் அமைதி, ஆரவாரம், சில நேரம் ஒரு மாதிரி ரௌத்திரம், அகங்காரமோ ஆங்காரமோ, சில நேரம் வெளியில் சொல்லவொண்ணா துக்கமோ மனக்கிலேசமோ, இன்னும் சில நேரம் யார் மீதோ எதன் மீதோ கொண்ட பற்று அதன்பால் விளைந்த ஏக்கம், ஏக்கத்தால் விளைந்த தாக்கம், தாக்கத்தால் வந்த மனோவலிகள் இன்னும் என்னவெல்லாமோ தோன்றும்.
நதியின் போக்கில் போகும்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினால் நீந்தத் தெரிந்தவர்கள் நீந்தி கரையேறிவிடுவார்கள். நீச்சல் தெரியாதவர்கள் ஒரு வாழை மட்டையோ மரக் கட்டையோ ஏதோ ஒன்று மிதந்து வந்தால் அதைப் பிடித்துக்கொண்டு எப்படியோ கரையேறும் உத்தியைக் கடைப்பிடித்து அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி நதியின் போக்கில் போய்க்கொண்டேயிருக்க வேண்டியதுதான்.
ஏதோ ஒரு பள்ளியில் படித்தோம், கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தோம், ஏதோ ஒரு வேலை கிட்டியது, அதைப் பற்றிக்கொண்டு வாழ்வைத் துவங்கி சில காலம் தள்ளிவிட்டு நண்பர்களுடன் அங்கே இங்கே சுற்றிவிட்டு சினிமா பார்க் பீச், சுற்றுலா என்று காலப்போக்கில் ஒரு நதியின் ஓட்டம் கடலை நோக்கி எப்படிப் போகுமோ அதுமாதிரிதான் எனது வாழ்வின் ஓட்டமும் இருந்திருக்கிறது.
பிறகு உரிய வயதில் திருமண ஆசை வந்து நாம் ஆசைப்பட்டோ இல்லை பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணையோ திருமணம் செய்து கொண்டு மண வாழ்க்கையினை அனுபவிக்கத் துவங்குவோம்.
நம் வாழ்க்கையிலும் அப்படித்தான். ஒரு மனிதன் குழந்தையாய் இருக்கும்போது (5 வயதிற்கு முன்பு) எதெதெற்கோ அழுவான், சிணுங்குவான். அவன் அழுகைக்கு காரணம் பசியாய் இருக்கலாம், பூச்சி பொட்டு கடித்திருக்கலாம். இல்லை, அப்போதுதான் தாய் ஆனவள் குழந்தையை படுக்கவைத்து தனக்குத் தெரிந்த ஏதோ ஒரு பாட்டை தாலாட்டு என்கிற பெயரில் பாடிவிட்டு அடுக்களையில் வேறு வேலையைப் பார்க்கவோ குளிக்கவோ துணி துவைக்கவோ போயிருக்கலாம்.
குழந்தை சட்டென்று தூக்கத்தில் விழித்தெழுந்து வீறிட்டு அலறலாம். அக்கம் பக்கம் தாயைத் தேடும். சுற்று முற்றிப் பார்த்து யாரும் இல்லாவேளையில் அழும். அதன் அழுகைக் குரல் கேட்டு தாய் வந்து அய்யய்யோ குழந்தை அழுகிறதே, என்ன ஆச்சு என்று ஒரு கவலைகொண்டு குழந்தையைக் கவனிப்பாள். வயிற்றைத் தொட்டுப்பார்த்து பசியில் அழுகிறதோ என்று பாலூட்டுவாள். பாலூட்டியபின்னும் சிலசமயம் குழந்தையை அழுகையை நிறுத்தாவிட்டால் அக்கம் பக்கம் சுற்றிப் பார்ப்பாள். ஏதோ பூச்சி பொட்டு கடித்திருக்குமோ என்ற பரபரப்பில் இருப்பாள். அப்போதுதான் ஒரு கரப்பான் பூச்சியோ தேளோ பல்லியோ சுவற்றின் மூலையில் போய்க் கொண்டிருக்கும்.
உடன் தாய் என்ன யோசிப்பாள்? ஓ, குழந்தையைப் பூச்சி கடித்திருக்கும் என்று கடித்த இடம் நோக்கி ஆராய்வாள். ஒரு தடயமும் கிட்டாவிடில் பூச்சியை தூரத் தள்ளிவிட்டு மறுபடியும் தாலாட்டுப் பாடி தூங்கவைப்பாள்.
சற்று பிராயம் கூடியபின் குழந்தை தவழத் துவங்கியபின் அதே மாதிரி ஏதோ ஒரு காரணத்தால் அழும். சில சமயம் காரணம் என்னவென்றே நமக்கு (அருகிலுள்ள பெரியவர்களுக்கு) புரியாது.
குழந்தை தவழ்ந்து எழுந்து என்ன செய்யும்? சுற்றிப் பார்க்கும். அம்மாவோ பாட்டியோ தாத்தாவோ யாரோ ஒரு பரிச்சயமான முகம் அருகில் தென்பட்டால் அவர்களை நோக்கித் தவழ்ந்து செல்லும். அவர்களும் குழந்தை தங்களை நோக்கி வருகிறதை அவதானித்து தூக்கிக் கொஞ்சுவர்.
ஒருவேளை பெரியவர்கள் யாரும் இல்லா நேரத்தில் குழந்தை என்ன செய்யும்? அழும். இது தன்னைக் கவனிக்க யாருமில்லை என்று குழந்தை ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரும், யாரையாவது அழைக்க அல்லது குறைந்தபட்சம் தாயாவது வருவாள் எனக் கூக்குரலிடும் பாவனையில் அழும். தாய் வந்தால் போச்சு. இல்லை வேறு யாராவது வந்தால் பரிச்சயமான முகமாய் இருப்பின் சமாதானமாகிவிடும். இல்லையேல் மீண்டும் அழுகை தொடரும்.
இது மாதிரி பழக்கப்பட்டுவிட்ட குழந்தை பிறகு எழுந்து நிற்கத் துவங்கி நடக்க ஆரம்பித்து தத்தக்கா பித்தக்கா என்று நடக்கும். ஒரு நிலைத்தன்மைக்கு வர சில வாரம் அல்லது மாதமாகலாம்.
இப்படித்தான் ஒரு பிராயம் வரை குழந்தையின் வாழ்க்கை துவங்குகிறது.

No comments:
Post a Comment