நான் யார்? எங்கிருந்தோ வந்தேன்? எங்கே போகிறேன்?
நான் என நான் நினைக்கும் நான் நானேதானா, யாரோதானா?
நானும் அந்த யாரோவும் ஒன்றேதானா,வேறு வேறா?
நாடகமே உலகம், நாமெல்லாம் அதில் நடிகர்கள் மாத்திரமே.
நாடகம் முடிந்ததும் திரை விலகும், மேடை கலையும்.
நாடகம் பிறிதொரு மேடையில் பிறிதொரு களத்தில் தொடரும்.
இந்த நாடகமயமான உலகில் இந்த நான் யார்? அதைத்தேடி ஒரு பயணம்.
No comments:
Post a Comment