Friday, January 23, 2015

என் குடும்பப் பாரம்பரியம் (தந்தை வழிக் கிளை உறவுகள்) (1)

என் குடும்பப் பாரம்பரியம் (தந்தை வழிக் கிளை உறவுகள்) (1)

ஒரு விதத்தில் கிளை உறவுகளைப் பற்றியும் அறிவது அவசியம்தானே?

தந்தை வழிக் கிளை உறவினர்கள்:

ஒரு விதத்தில் கிளை உறவுகளைப் பற்றியும் அறிவது அவசியம்தானே?

கமலா (என் மூத்த அத்தை) கணவர் ராமாமிர்தம் ஐயர். மூத்த அத்தை என்றுதான் எனக்குத் தெரியும். நேர்வழி அத்தையா (குறிப்பில்லை).. இவர் என் தாத்தாவின் மூத்த மனைவியின் புதல்வி என்றும் உறவு வட்டத்தில் சொன்னதாக நினைவு. எனவே அத்தை முறை.

(1)
மங்களம் (என் ரெண்டாவது அத்தை). கணவர் பெயர் ராமாமிர்தம், மூத்த அத்தை கமலாவை மணந்தவர், அவர் மறைவுக்குப் பின் அடுத்த அத்தையை ரெண்டாம் தாரமாய் மணந்தவர் என்று அறிகிறேன். (அதே கல்லூர் பூர்வீகம். குழந்தைகள் அவர்தம் சந்ததி விவரம் தெரியும் (பின்னர் குறிப்பிடுகிறேன், முழுப்பெயர் விவரங்கள் தற்சமயம் கோர்வையாய் நினைவில்லை).


(2)
ஜெயம் (என் ரெண்டாவது அத்தை). கணவர் பெயர் ராஜகோபால் ஐயர், சென்னை பல்லாவரம் பூர்வீகம், அங்கேயே செட்டிலாகிவிட்ட குடும்பம். குழந்தைகள் அவர்தம் சந்ததி விவரம் தெரியும் (பின்னர் குறிப்பிடுகிறேன், முழுப்பெயர் விவரங்கள் தற்சமயம் கோர்வையாய் நினைவில்லை).

(3)
ஸ்ரீனிவாசன் ஐயர் (என் சித்தப்பா). மனைவி பெயர் மோகனாம்பாள். சென்னையில் செட்டிலானவர்கள். குழந்தைகள் அவர்தம் சந்ததி விவரம் தெரியும் (பின்னர் குறிப்பிடுகிறேன், முழுப்பெயர் விவரங்கள் தற்சமயம் கோர்வையாய் நினைவில்லை).

(4)
மகாலிங்கம் ஐயர் (என் சித்தப்பா). மனைவி பெயர் சரஸ்வதி. சீர்காழியில் செட்டிலானவர்கள். குழந்தைகள் அவர்தம் சந்ததி விவரம் ஓரளவுக்குத்  தெரியும் (பின்னர் குறிப்பிடுகிறேன், முழுப்பெயர் விவரங்கள் தற்சமயம் கோர்வையாய் நினைவில்லை). இவர் இளம் வயதில் நோய்வாய்ப்பட்டு 1973ல் இயற்கையெய்தினார். அதன்பின் இவர்தம் குடும்பம் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டனர். சமீபத்தில்தான் என் இளைய சகோதரர் முயற்சியால் (2014ல்) தொடர்பு எல்லைக்கு வந்துள்ளனர் இவர்தம் வாரிசுகள்.

(5)
லலிதா (என் சிறிய அத்தை). கணவர் பெயர் வெங்கட்ராம ஐயர். நெய்வேலியில் வாழ்ந்து வந்தவர்கள். குழந்தைகள் அவர்தம் சந்ததி விவரம் தெரியும் (பின்னர் குறிப்பிடுகிறேன், முழுப்பெயர் விவரங்கள் தற்சமயம் கோர்வையாய் நினைவில்லை).

(6)
ராஜி (அத்தை முறை உறவு). (2)ல் குறிப்பிட்ட ஜெயம் அத்தை இறந்தபின் ராஜகோபாலன் ஐயர் இரண்டாம் தாரமாக மணம் புரிந்தவர். இவர்தம் பூர்வீகம் கும்பகோணம். குடந்தையில் எங்கள் இல்லத்தில் தெருவில் இவர்தம் பூர்வீகம், தாய் தந்தையர், சகோதரர்கள் வாழ்ந்து வந்ததால் அவர்களுடன் உறவையும் மீறிய நட்பு வட்டத்தில் உள்ளவர்கள். குழந்தைகள் அவர்தம் சந்ததி விவரம் தெரியும் (பின்னர் குறிப்பிடுகிறேன், முழுப்பெயர் விவரங்கள் தற்சமயம் கோர்வையாய் நினைவில்லை).

(7)
ஸ்ரீனிவாசன் ஐயர் () துரை. ரெயில்வேயில் பணிபுரிந்தவர் என்பதால் ரெயில்வே துரை என்று கும்பகோணத்தில் நாங்கள் வாழ்ந்த சோலையப்பன் தெருவில் பெருவாரியாய் அறியப்பட்டவர். மனைவி பெயர் சாவித்திரி அம்மாள்.  மேற்சொன்ன ராஜியின் மூத்த சகோதரர்.

(7a)
கணேசன் ஐயர். துரை அவர்களின் இளைய சகோதரர். மற்ற விவரம் தெரியாது. மும்பையில் செட்டிலானவர்.

7(b)
கோபாலகிருஷ்ணன் () தரணி. துரை அவர்களின் மூத்த குமாரன். சென்னையில் வாழ்பவர். குடந்தையில் குழந்தைப் பருவத்திலிருந்தே ஆத்யந்த நண்பர். உறவு வட்டம் என்று பிற்காலத்தில்தான் தெரிந்து கொண்டேன்.

7(c)
உமா. தரணியின் சகோதரி. சென்னையில் வாழ்பவர். மேல்விவரம் அடுத்த தலைமுறை விவரம் தெரியாது.

7(d)
கௌரி கோபாலகிருஷ்ணன், தரணியின் மனைவி.
7(e)
கௌதம் கோபாலகிருஷ்ணன்.  தரணியின் புதல்வன்.
7(f)
கௌரவ் கோபாலகிருஷ்ணன். தரணியின் புதல்வன்.

No comments:

Post a Comment