Friday, January 23, 2015

என் குடும்பப் பாரம்பரியம் (1)



என் குடும்பப் பாரம்பரியம் (1)
என் குடும்பப் பாரம்பரியம் பற்றி ஆராய்வதில் எனக்குள்ள ஆர்வம் அவ்வப்போது சில முயற்சிகள் எடுத்ததுண்டு. அதைப் பற்றி என் முன் முயற்சிகளைப் பற்றி முன்னர் ஏதோ ஒரு பதிவில் குறிப்பிட்டதாக நினைவு. இல்லையேல் என் அகராதித் தொகுப்பிலிருந்து எடுத்து இங்கே இந்த அரங்கில் பின்னர் பதிவு செய்கிறேன்.

ஒரு 5 தலைமுறையாய் என் மகனையும் சேர்த்து 6 என்று தலைமுறை அடையாளங்கள் இவை:

தந்தை வழி மூத்தோர் பாரம்பரியம் :

பிறந்த ஊர்: கும்பகோணம். முன்னோர் வாழ்ந்தது கடிச்சம்பாடிக் கல்லூர் என்று அறியப்படும் கல்லூர் கிராமம், குடந்தையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சோழபுரம் மற்றும் கும்பகோணம் தாலுக்கா எல்லைக்குட்பட்டது)

(1)
ஸ்ரீராம ஐயர் (முழுப் பெயர் தெரியாது, சர்மா அதுதான்) என் தாத்தனுக்கும் தாத்தன்), எள்ளுத் தாத்தன். அந்தப் பாட்டி பெயர் தெரியாது.

(2)
ஸ்வாமிநாத ஐயர் (முழுப்பெயர் தெரியாது, சர்மா அதுதான்) என் தந்தைக்குத் தாத்தன், கொள்ளுத் தாத்தன். அந்தப் பாட்டி பெயர் சங்கரி அம்மாள்.

(3)
சுப்ரமணிய ஐயர் (முழுப்பெயர் தெரியாது, சர்மா அதுதான்)
என் தாத்தா (தந்தைக்கு தந்தை). பாட்டி பெயர் வாலாம்பாள்.

(3
) வெங்கட்ராம ஐயர் (தந்தையின் பெரியப்பா, சுப்ரமணிய ஐயரின் சகோதரர்) அவர் மகன் பிச்சுமணி என்கிற பிச்சு.

(3
) மீனாட்சிப் பாட்டி (அத்தைப்பாட்டி என்று அழைக்கப்பட்டவர்) சுப்ரமணிய ஐயர் மற்றும் வெங்கட்ராம ஐயரின் சகோதரி. மேற்குறிப்பிட்ட பிச்சு சித்தப்பாவை ஸ்வீகாரப் புத்திரனாய்க் கொண்டவர்).

(4)
சுந்தரேச ஐயர் (தந்தை). தாயார் பெயர் ருக்மணி என்கிற பட்டம்மாள் (அன்பாய் பட்டு அல்லது ருக்கு. பெருவாரியாய் அறியப்பட்டது பட்டு என்றுதான்).

(5)
நான் சிவசங்கரன் (சிவசங்கர சர்மா). குடும்பத்தினர் அழைப்பது சங்கர், பொது வெளியில் அலுவலகத்தில் நண்பர்கள் வட்டத்தில் சிவா. என் மனைவி பெயர் மாலதி என்கிற திரிபுர சுந்தரி (குடந்தை பூர்வீகம் தாய் வழியில், தந்தைவழியில் பெரியகுளம் பூர்வீகம். தந்தைவழித் தாய் பாரம்பரியம் சிதம்பரத்தை அடுத்த கவரப்பட்டு என்று கேள்விப்பட்டது).

[
எனக்கு நானே சோஷியலாய் முக நூல் (ஃபேஸ்புக், ட்விட்டர், பர்சனல் ப்ளாக் என்று) அடையாளப் படுத்திக்கொண்டது இந்தப் பெயர்களில்: சிங்கை சிவாஸ், சிங்கை சிவா, சோலையூரான், குடந்தை சிவா. (இன்னும் வரலாம்)]

(6)
திவ்யா சிவசங்கரன் () பட்டம்மாள் (என் மகள்).

(7)
ஸ்ரீஹரி சிவசங்கரன் (என் மகன்) பிறப்பால் ஹரீஷ் என்கிற ஹரிஹரன். பெரியோர் வைத்த பெயர் ஒப்பிலியப்ப ஹரிஹரன் ( பிறந்த 11ம் நாள் நெல்லில் எழுதிய பெயர். ஹரிஹர சர்மா என்று அறியப்படுகிறான்).


தாய் வழி மூத்தோர் பாரம்பரியம்:
பூர்வீகம் என்றால் மன்னார்குடியை அடுத்த ரெங்க நாதபுரம் என்று பெரியோர் சொல்லிக்கேட்டது. சரியான ஊர் தெரியாது. ஒரு சில தாய்வழி உறவினர் இன்னமும் வாழ்வது வடபாதிமங்கலம் மன்னார்குடியை அடுத்த பழையனூர் கிராமம். பிற்காலத்தில் மன்னார்குடியில் என் தாய்வழி முன்னோர் வாழ்ந்தார்கள்.

(1)
ஆதி நாராயண ஐயர் (ஆதி நாராயண சர்மா) (தாய்வழி முப்பாட்டன், எள்ளுத்தாத்தா. பாட்டி பெயர் பாகீரதி அம்மாள்.

(2)
வெங்கட்ராம ஐயர் (வெங்கட்ராம சர்மா) (தாய்வழி முப்பாட்டன், கொள்ளுத்தாத்தா. பாட்டி பெயர் ருக்மணி அம்மாள்.

(3)
விஸ்வனாத ஐயர் (விஸ்வனாத சர்மா) (தாய்வழித் தாத்தா) பாட்டி பெயர் மீனாட்சி அம்மாள்.

No comments:

Post a Comment